காண்ட்ராக்ட் தொழிலாளருக்கும் ESI பென்சன் சாத்தியம்!

https://www.workersunity.com/wp-content/uploads/2022/12/MRF-deseased-worker-family.jpeg

உயிரிழந்த காண்ட்ராக்ட் தொழிலாளி குடும்பத்துடன் நின்ற  MRF நிரந்தர தொழிலாளர்கள்

மூணு மணிக்கு வேலை முடிச்சிட்டு, உன்ன பாக்க வரேன் மாஎன்று மகளிடம் சொல்லி சென்ற நாராயணனுக்கு தெரியாது அவர் இனி வீடு திரும்ப போவதில்லை என்று . காண்ட்ராக்ட் தொழிலாளியாக MRF இல் பணி புரியும் நாராயணன், தொழிற்சாலையில் திடீரென சுருண்டு விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே உயிரிழந்துள்ளார். ஈடுகட்ட முடியாத இந்த உயிரிழப்பினால் தத்தளிக்கும் குடும்பத்திற்கு ஒரு துடுப்பாக அமைந்தது கூட்டு முயற்சியினால் கிடைக்கப்பட்ட ESI நல திட்ட உதவிகள் மற்றும் நிதி ஆதரவுகள்.  

காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு உண்டாகும் பாதிப்புகள் பல  கேட்பாரற்று போகிறது என்பதே இன்றைய நிலை. இச்சூழலில்  MRF காண்ட்ராக்ட் தொழிலாளி நாராயணனின்  இறப்பு  சக தொழிலாளர்களுக்கும், அவர் குடும்பத்திற்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. காண்ட்ராக்ட் தொழிலாளருக்கான ESI பென்ஷன் மற்றும் உதவி தொகை என்பது எட்டாக்கனியாக  இருக்கும் பட்சத்தில்    நாராயணன் குடும்பத்திற்கு கிடைக்கப்பட்ட நீதி என்பது  இத்தொழிலாளர்களின் உரிமை தேடலின் முக்கியப்படியாக பார்க்கப்படுகிறது  

காண்ட்ராக்ட் தொழிலாளருக்கு  பென்ஷன் கிடைக்கப்படுவது இதுவே முதல் முறை. நாராயணன்  இறுதி சடங்கில் தொழிற்சங்க தலைவர் எழில் கரோலின் அவர்களோடு தொழிற்சங்க தோழமைகள் அவர்   குடும்பத்துடன் நிற்போம் என முழக்கமிட்டு உறுதியேர்த்தோம். தொழிற்சங்கத்தின் முன்னெடுப்பை  தாண்டி நிர்வாகம் மற்றும் காண்ட்ராக்டரின் ஆதரவின் மூலமே இது சாத்தியமானதுஎன்று எம் ஆர் எப் தொழிலாளர் சங்கத்தின் உள் உப தலைவர் தோழர் சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.  

https://www.workersunity.com/wp-content/uploads/2022/12/MRF-deseased-worker-family-gets-check.jpg

MRF இல் இது வரை சாத்தியப்படாத காண்ட்ராக்ட் தொழிலாளரின் ESI உதவிகள் இம்முறை சாத்தியப்பட்டது எப்படி?

ஏற்கனவே MRF தொழிற்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர்  இரண்டு காண்ட்ராக்ட் தொழிலாளர்கள்  இறப்புகள் நடைப்பெற்றுள்ளது . ஆனால் அவை  தொழிற்சாலை  இறப்பாக   உறுதி செய்யப்படாததால்,    பெரிதாகதீர்வை நோக்கி நகரவில்லை என்று கூறப்படுகிறது . “ஒரு குடும்பத்திற்கு மட்டும் க்ராடூடிட்டி   வழங்கப்பட்ட நிலையில், இன்னொரு குடும்பம் இன்று வரை எந்த வித உதவியும் இன்றி நிற்கிறது, MRF தொழிற்சாலையில்  காண்ட்ராக்ட் தொழிலாளருக்கு  பென்ஷன் திட்டத்தை உறுதி செய்தது இதுவே முதல் முறை.”  என்று தோழர் சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்

 நாராயணன்  ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டதில் இருந்து இறுதி சடங்கு வரை தொழிற்சங்கத்தின் இருப்பு என்பது  அக்குடும்பத்திற்கு கிடைக்கப்பட வேண்டிய உதவிகளை சாத்தியப்படுத்தியதுநாராயணன் வசித்த ராமநாதபுரம் ஊர் நிர்வாகமும் குடும்பத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி  தொழிற் சங்கத்தை வலியுறுத்தியது. அதன் பின்னர் நிர்வாகத்தின் மேலிருந்த அழுத்தம் அக்குடும்பம்  ESI உதவிகள் பெறுவதற்கான பாதையை வழிவகுத்தது

நிரந்தர தொழிலாளர்கள் உடல் நலம் குன்றியிருந்தாலோ அல்லது உயிரழந்தாலோ,  ரூ. 50 முதல்   ரூ.100 தொழிலாளர் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படுவதாக தொழிற்சங்க செயற்குழுவில் முன்பே முடிவெடுக்கப்பட்டுள்ளது.  பாதிப்புகள் ஏற்படும் போது, நிரந்தர தொழிலாளர்களிடம் இருந்து நிர்வாகமே நிதியை பிடித்தம்  செய்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நிர்வாகம்  ஒப்புக்கொண்டுள்ளது.  அதே போல் காண்ட்ராக்ட் தொழிலாளர் நாராயணன் இறப்பிற்கும், நிரந்தர தொழிலாளர்களிடம் இருந்து பணத்தை பிடித்துக்கொடும்படி கேட்டுக்கொண்டபோது நிர்வாகம் அதை மறுத்துள்ளது. அதனை தொடர்ந்து தொழிலாளர்கள்  தாங்களாகவே பணத்தை திரட்டி   1,30,000 ரூபாயை  நாராயணன் குடும்பத்திற்கு   வழங்கியது. அதற்கு பின் தொழிற்சங்கம் தொடர்ச்சியாக நிர்வாகத்துடன்  ESI திட்டங்கள் & பென்சனை பற்றிய உரையாடலை நிகழ்த்துயது  அதன் தொடர்ச்சியாக நிர்வாகமும் கான்ட்ராக்டரும்  தகுந்த ஆவணக்கங்களை ESI க்கு வழங்க,  உதவிகளை புரிந்தது . ஆக நிர்வாகம் மற்றும் கான்ட்ராக்டரின் ஒத்துழைப்பு இருப்பினும், தொழிற்சங்கத்தின் தொடர் முனைப்பும்  இதனை சாத்தியப்படுத்தியுள்ளது.

https://www.workersunity.com/wp-content/uploads/2022/12/mrf-4.jpg

காண்ட்ராக்ட் தொழிலாளியின் இறப்பும், பின்னணியும்

 30 ஆண்டுகளுக்கு மேலாக  MRF தொழிற்சாலையில் காண்ட்ராக்ட் தொழிலாளியாக பணி புரிபவர் நாராயணன். எப்போதும் போல் வீட்டில் இருந்து கிளம்பிய அவர்,   மனைவி மகளிடம் வேலை முடித்துவிட்டு வீடு  திரும்புவதாக  சொல்லி சென்றுள்ளார்காலை  7 முதல் மதியம் 3 வரையிலான  ஷிஃப்ட் வேலை முடிந்தப்பின்  .டீ செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளார். .டீ செய்ய முடியாது என தவிர்த்து, தண்ணீர் குடிக்க சென்ற நொடியில்  தீடிரென சுருண்டு விழுந்துள்ளார். மிக மோசமான உடல்  நிலையில் தொழிற்சாலையில் இருந்து, கொண்டு செல்லப்பட்டுள்ளார். அருகாமையில் உள்ள சுகம் மருத்துவமனை அனுமதிக்க மறுத்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் இறப்பை உறுதி செய்த மருத்துவர்கள், அழைத்து வரும் முன்னரே இறந்துள்ளதாக   குறிப்பிட்டுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் முடிந்து  அடுத்த நாள்   குடும்பத்திடம் உடல்  ஒப்படைக்கப்பட்டது

மாரடைப்பு இறப்பு என குறிப்பிடப்பட்டாலும், அதற்கான காரணிகளை அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையே உள்ளது. நாராயணனின்  முதல் மகள்  மீனாக்ஷி குறிப்பிடுகையில்நல்லபடியா வீட்டில் இருந்து  நடந்து சென்ற அப்பா  பிணமாக திரும்பியது பேரதிர்ச்சியாக உள்ளது. எந்த வித உடல் நலக்குறைபாடுகளும் அவருக்கு இல்லைஎன்று குரல் நடுங்குகிறார். மேலும் தகவல் அறிந்து  நான் மருத்துவமனைக்கு செல்வதற்குள் வார்டில் இருந்து பிணவறைக்கு கொண்டு சென்று விட்டது  பெரும் வருத்தம். எங்க அப்பா தான் எங்க உலகம். அவர் இழப்பை நினைத்து நாங்கள் வருந்தாத நாளே இல்லைஎன குறிப்பிடுகிறார் மீனாட்சி

https://www.workersunity.com/wp-content/uploads/2021/05/Screenshot-12.png

உடைந்த குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட ஆதரவு கரங்கள் 

“கைவிட மாட்டோம், கைவிட மாட்டோம். 

நாராயணன் குடும்பத்தை,

 கைவிட மாட்டோம் கைவிட மாட்டோம்” 

என்ற முழங்கிய தொழிற்சங்கம், சக தொழிலாளரின் குடும்பத்துடன் நிற்க வேண்டும் என்று உறுதியேர்த்தது. அதன் பின்னர் நிரந்தர தொழிலாளர்களை கொண்ட MRF தொழிலாளர்கள் சங்கம், வரலாற்று நகர்வாக நிதி ஆதரவை திரட்டி காண்ட்ராக்ட் தொழிலாளரின் குடும்பத்தோடு நின்றதுசங்கத்தின்  வலியுறுத்தலுக்கு பின்னரும்காண்ட்ராக்டர் & நிர்வாகத்தின் ஆதரவிலும்  முக்கிய  ESI நலத்திட்ட உதவிகள்  கிடைக்கப்பட்டுள்ளது.  

-நிர்வாகமும் கான்ட்ராக்டரும் இனைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு   ரூ, 25,000 நிவாரணத் தொகையை வழங்கியுள்ளது.

முதல் கட்ட ஈமச்சடங்கிற்கான  செலவு 15,000  ESI மூலம் கொடுக்கப்பட்டது

-MRF தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு தீர்மானத்தின் படி ரூ.1,33,100 நாராயணன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது

ஏப்ரல் மாதம் முதல் ஆறு மாதத்திற்கான பென்சன் அரியர்ஸ் தொகை ரூ 72,000 தொழிலாளரின்  மனைவி தெய்வநாயகியிடமும்; ரூ 50,000 திருமணமாகாத இரண்டாவது மகள் அணு-பிரியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது

“விபத்தினால் ஏற்படும் இறப்பிற்கு பென்ஷன் திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்த தொழிலாளர் பெற்ற சம்பளத்தில் 90% தொகை பென்ஷன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அதில் ஐந்தில் மூன்று பங்கு மனைவிக்கும், இரண்டு பங்கு திருமணமாகாத மகளுக்கும்  வழங்கப்படும் என  திருவொற்றியூர் ESI – branch மேனேஜர் குறிப்பிட்டார்

https://www.workersunity.com/wp-content/uploads/2022/12/MRF1.jpg

வேலை சூழலும், பாதுகாப்பு அம்சமும் 

சங்கமாக இணையாத  சூழலில்  நிரந்தர தொழிலாளர்களை விட காண்ட்ராக்ட் தொழிலாளரின் நிலை மோசமாக உள்ளது என்பதே நிதர்சனம் . எப்போது வேண்டுமெனாலும் வேலையில் இருந்து நீக்கப்படலாம்  என்ற நெருக்கடியில் நிறுத்தப்படும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் எந்த வித கோரிக்கையையும் முன்வைப்பதில்லை

அடுத்த ஷிப்ட்டில் ஆட்கள் குறைபாடு இருக்கும்போது தாங்கள் கட்டாயமாக .டீ செய்தே ஆக வேண்டும். பகல் வேலையை முடித்து விட்டு இரவு வேலையையும் தொடர்ந்து செய்தே ஆக வேண்டும். வேறு வழி இல்லை  ” என குறிப்பிடுகிறார் காண்ட்ராக்ட் தொழிலாளி

MRF பொறுத்த வரை அதிக வெப்பத்திலும், கனமான உபகரணங்கள், இயந்திரங்களுடன் அமைகிறது வேலைசூழல்ஆகையால் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டு, Safety வகுப்புகள்  எடுக்கப்படுகிறது என்று தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதுஎவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை வகுப்புகள்  நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த நிரந்தர தொழிலாளி , “விபத்து நடந்தால் உடனுக்குடனே நடத்துவது உண்டு. இல்லையெனில் சாதாரணமாக நடக்கும்.” என குறிப்பிட்டார் 

விபத்து நடக்கும்பட்சத்தில் தொழிற்சாலைக்குள் முதலுதவிகள் வழங்கப்படுகிறதுஅவசரம் என்ற  பட்சத்தில் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. “தொழிலாளர்கள் ESI மருத்துவமனைக்கு செல்ல முடியாத பட்சத்தில் மற்ற தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையின் செலவினங்களை அதற்கான ரசீதுகளுடன் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அரசு நிர்ணயித்த விலையின்படி ESI அதற்கான பணத்தை திரும்ப செலுத்துகிறது”  என்று  20 ஆண்டுகளாக மேலாக  ESI யில் பணி புரியும் செவிலியர் உஷா குறிப்பிட்டார். மேலும் திருவொற்றியூர் டிஸ்பென்சரியில் மட்டும் சராசரியாக ஒரு நாளிற்கு  சுமார் 200 நோயாளிகள் வருவதாக அவர்  கூறினார்

விபத்துகள் ஏற்படும்பொழுது காண்ட்ராக்டர் மூலம் தகவல் கிடைக்கப்பட்டு  ESI யில் பதிவு செய்யப்படும் எனவும். சராசரியாக மாதம் 4-5 விபத்து வழக்குகள்  திருவொற்றியூர் கிளையில் பதிவு செய்யப்படுகிறதுஎன குறிப்பிட்டார் திருவொற்றியூர் ESI – branch மேனேஜர் 

தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் மருத்துவ சேவையை உறுதி செய்யும் காப்பீடு திட்டமே  ESI. சென்னையில் சுமார் 44 டிஸ்பென்சரிக்களில் அடிப்படையான உடல் நலக்கோளாறுகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கும் , சோதனை செய்வதற்கும் , மருந்து  வழங்குவதற்கும் டிஸ்பென்சரியில் வசதிகள் உண்டு. தீவிர மருத்துவ உதவிகளுக்கு  அயனாவரம் மற்றும் KK நகர் மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப்படுகிறார்கள். 

மேலும் ரூ.1000-1500 வீதத்தில் கிடைக்கப்படும்  PF  பென்ஷன்  தொகையையும்,  EDLI தொகை 4 லட்சதையும், நிர்வாகம் தரப்பில் இழப்பீடு தொகையையும் வழங்க தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது.

எதிர்காலத்தில் இது  போன்ற அசம்பாவிதங்கள் நடக்கும்பட்சத்தில், இப்போது  கிடைக்கப்பட்ட உதவிகள் நிர்வாகம் தரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்என்று தோழர் சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.

காண்ட்ராக்ட் தொழிலாளருடன்  நிரந்தர தொழிலாளர்  ஒன்றுப்படுவதின் வெற்றி கதையாக இந்த  முயற்சிகள் இருப்பினும் காண்ட்ராக்ட் தொழிலாளரின் ஒட்டுமொத்த உரிமை மற்றும் வேலை சூழல் மாற்றங்களுக்கு இன்னும் வெகு தூரம் உள்ளது. வேலை சூழல், ஊதியம், சங்கமைத்தல் உட்பட பலவற்றில் காண்ட்ராக்ட் தொழிலாளருக்கும்  நிரந்தர தொழிலாளருக்கும்  உள்ள இடைவெளியை  களைவதை நோக்கி நகர்வதே முழு தீர்வாகும்.

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.