41 வயதே ஆன தமிழ்நாட்டைச் சேர்ந்த மும்பை துப்புரவுப் பணியாளர் மாரடைப்பில் இறப்பு

Chennai Sanitation worker dies in Mumbai

By Vaishnavi

41 வயதே ஆன தமிழ்நாட்டைச் சேர்ந்த மும்பை துப்புரவுப் பணியாளர் மாரடைப்பில் இறப்பு
மும்பையில் துப்புரவுப் பணியாளராய் பணி புரியும் சேலம் ஆத்தூரைச் சார்ந்த 41 வயது ஆலமுத்து நேற்று மாரடைப்பில் இறப்பு. இச்செய்தி அவர் குடும்பத்தையும் சகபணியாளர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து பல தொழிலாளர்கள் மும்பையில் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு குடும்பமாகவும், குடும்பத்தை ஊர்களில் விட்ட நிலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

“3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்கின்றனர். இதில் 1,300 – 1,500 தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்கள்” எனக்குறிப்பிடுகிறார் துப்புரவுப் பணியாளர் சங்கத்தின் (கச்ரா வதுக் சங்கஷ் சம்டி ( KVSS)) பொதுச் செயலாளர் மிலிண்ட் ரனடே.

manual scavenging man in gutter safai karmchari
பொதுவான புகைப்படம்

தனது குடும்பம் மற்றும் குழந்தைகளைச் சொந்த ஊரான சேலத்தில் விட்டு, மும்பை மண்ணை தனது வேலையிடமாகவும் வாழ்விடமாகவும் அமைத்துக்கொண்டவர் ஆலமுத்து. இந்நிலையில் எப்போதும் போல ஏப்ரல் 5, அன்று தன் வேலைக்குப் பேருந்தில் புறப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதினால், பேருந்திலிருந்து இறங்கி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தானாகவே அனுமதித்துக்கொண்டுள்ளார். துரதிஷ்டமாக மருத்துவமனைக்கு வந்தடைந்த சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளார் ஆலமுத்து. “அவர் மருத்துவமனைக்கு விரைந்த பின்னர் ICU விற்கு கொண்டு செல்லப்படும் போதே மாரடைப்பில் உயிர் இறந்துள்ளார்.” எனக் குறிப்பிடுகிறார் மிலிண்ட் ரனடே.

உடல் அவரின் சொந்த ஊரான சேலம்- ஆத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஏப்ரல் 7ஆம் தேதி அன்று இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . உடன் பணிபுரியும் பெருமாள் ராஜ், ” அவனுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளது. குடும்பம் எல்லோரும் ஆத்தூர் சேலத்தில் உள்ளனர். சொந்த ஊருக்கு உடலை தொடர் வண்டியில் எடுத்துக்கொண்டு போகிறோம்” எனக் கூறினார். மேலும் இளம் வயது இறப்புகளைப் பற்றி பெரும் கவலை கொண்ட பெருமாள், ” போன வாரம் 31 வயதான ஒரு பணியாளர் இறந்துள்ளார். மும்பையில் இளம் வயது இறப்பை அதிகம் கேள்விப் படுகிறோம். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது” எனக்குறிப்பிடுகிறார்.

manual scavenging maut ka gutter safai karmchari

” ஆலமுத்து இறப்பின் ஈமச்சடங்கிற்கு 1 லட்ச ரூபாய் தொகையும், மனைவிக்கு பென்சன் தொகை மற்றும் மனைவிக்கு புதிய வேலையும் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும். நாங்கள் அதற்கான வழக்கினை ஜெயித்துள்ளோம். அதன் படி நிரந்தர தொழிலாளரான ஆலமுத்துவின் குடும்பத்திற்கு அந்த பயன் சேரும்” எனக்குறிப்பிடுகிறார் மிலிண்ட்.

‘ஆலமுத்து அரிஜன்’ என்று தன் FACEBOOK பக்கத்தில் பெயரைக் கொண்டுள்ள ஆலமுத்து, தொழிற்சங்க வேலைகளில் ஆர்வம் கொண்டவர். சமூக வலைத்தளங்களில் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களின் அஞ்சலி செய்திகளைக் காண முடிகிறது. “அவர் கமிட்டீ தலைவர். ஒரு சிறந்த ஆளுமையாக உருவாகிக் கொண்டிருந்தவர்” எனக்குறிப்பிடுகிறார் மிலிண்ட் .

பெண் தொழிலாளர் சங்கம் தனலட்சுமி, “முதலில் ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் சந்தித்தபோது, அவர் பெயரை நான் கேட்டபோது ஆலமுத்து அரிஜன் என்று அறிமுகம் படுத்திக்கொண்டார். அதென்ன அரிஜன் என்று நான் கேட்டபோது அப்படி அழைப்பது தான் எனக்குப் பிடிக்கும் எனக்கூறினார். மிகவும் துடிப்பானவர், அவர் இறப்பு வருத்தத்தை அழிக்கிறது” எனக்குறிப்பிட்டார்.

இளம் வயது மரணங்கள் பல கேள்விகளை ஏற்படுத்துகிறது . அரசும் மருத்துவத்துறையும் இந்த இறப்பிற்கான காரணத்தைச் சரிவர விளக்குவதும் அதனைத் தொழிற்சங்கம் உறுதிப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது.

மேலும் ஆலமுத்துவின் இறப்பு பெரும் துயரான செய்தி என்றாலும் ஒரு பாடத்தைச் சமகாலத்தில் விட்டுச் சென்றுள்ளது . வடக்கன்ஸ் என்று புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் வன்முறை செலுத்திக்கொண்டிருக்கும் அதே சமையத்தில் , மும்பை போன்ற மாநிலங்களில் தமிழ் மக்கள் நிரந்தரப்பணிகளில் வேலை செய்வதை அங்குள்ள தொழிற்சங்கங்கள் உறுதி செய்துள்ளது என்பதை தமிழர்களும் தமிழ்நாட்டு தொழிற்சங்கமும் சிந்திப்பது மிக அவசியம்.

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.