கடந்த வார செய்திகள்: மார்ச் 10

#வடக்கு தெற்கு பிரிவு புலம் பெயர் தொழிலாளர்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் ஏன் தொழிற்சாலைகள் இல்லை என்ற கேள்வியை யாரும் எழுப்புவதில்லை. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர் என்ற செய்தியைப் பரப்பும் இந்தியர்கள் தெற்கு மாநிலங்கள் பெற்றுள்ள அடிப்படை ஆட்சிமுறையை ஏன் வட மாநிலங்கள் பெறவில்லை என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். சமூக ஊடக வெளிகளை  அரசியல்  காரணங்களுக்கு ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கு பாஜக அரசியல்வாதிகளிடம் வெளிவருவதைக் காணமுடிகிறது

Source: Theprint

#சட்டத்திற்குப் புறம்பான பைக் டாக்சியை எதிர்த்து பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் தொடுப்பதாக எச்சரிக்கை. வெள்ளை பதிவு கொண்ட பைக் டாக்ஸி சட்டத்திற்குப் புறம்பாக ஓட்டுவதை மாநில அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்  மார்ச் 20 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகத் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது

Source: thenewsminute

#நாசிக் முதல் மும்பை வரை  விவாசியிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதயாத்திரை  துவக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வெங்காயத்திற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயப்பொருட்களுக்கு நியாயமான விலை, மின்சார மானியம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Source: Timesofindia

#காண்ட்ராக்ட் சுகாதார பணியாளர்கள் டெஹ்ராடுனில் மார்ச் 16 போராட்டத்தைத் துவங்குகின்றனர். டெஹ்ராடுனில்  சுமார் 1,600 பாராமெடிகள் ஊழியர்கள் தங்களை வேலையில் எடுக்கவோ அல்லது மாற்றுப் பணிகளில் அமர்த்தவோ  கோரிக்கை வைத்துள்ளனர். கோவிட் காலத்தில் 6 மாத கான்ட்ராக்ட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருமுறை புதிக்கப்பட்ட செவிலியர்கள் இவர்கள். இவர்களை  இப்போது நீக்கியது  அநீதி எனக் குறிப்பிடுகிறது உத்திராக்கந்த் முன்கள சுகாதார பணியாளர்கள் சங்கம் .

Source: Timesofindia

#பிப்ரவரி 1 முதல் ஆதார் சார்ந்த கட்டண திட்டம் (ABPS ) மூலமே  100 நாள் வேலை தொழிலாளர்கள் பணம் செலுத்தப்படுவார்கள் என்பதை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்துப் பல போராட்டங்கள் வெடித்த சூழ்நிலையில் மத்திய அரசாங்கம் இத்திட்டத்தைப் பின்வாங்குவதற்கு எந்த திட்டமும் இல்லை என்று கூறியதோடு நடைமுறையில் உள்ள போராட்டங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளது

Source: Newindianexpress

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.